/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வெங்கடசமுத்திரத்தில் கிராம சபை கூட்டம்
/
வெங்கடசமுத்திரத்தில் கிராம சபை கூட்டம்
ADDED : ஆக 16, 2025 01:40 AM
பாப்பிரெட்டிப்பட்டி, சுதந்திர தினத்தை முன்னிட்டு, பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் வெங்கடசமுத்திரம் ஊராட்சியில், கிராம சபை கூட்டம், ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில், அரூர் ஆர்.டி.ஓ.,சின்னுசாமி தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில்பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. வெங்கட சமுத்திரத்தில் இயங்கும் அரசு மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கூட்டத்தில் தாசில்தார் சின்னா, பி.டி.ஓ.,க்கள் அறிவழகன், அப்துல்கலாம் ஆசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் கோவிந்தராஜ் செய்திருந்தார். இதே போன்று மோளையானுார், பொம்மிடி, பையர்நத்தம் உள்ளிட்ட, 19 ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடந்தது.
இதில் துணை பி.டி.ஓ.,க்கள் ராஜா, உமா, வேடியப்பன், ரங்கநாதன் உள்ளிட்ட அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் கலந்து கொண்டனர்.

