/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தாத்தா காரியத்திற்கு வந்தவர் கிணற்றில் தவறி விழுந்து சாவு
/
தாத்தா காரியத்திற்கு வந்தவர் கிணற்றில் தவறி விழுந்து சாவு
தாத்தா காரியத்திற்கு வந்தவர் கிணற்றில் தவறி விழுந்து சாவு
தாத்தா காரியத்திற்கு வந்தவர் கிணற்றில் தவறி விழுந்து சாவு
ADDED : ஆக 29, 2024 07:38 AM
பாப்பிரெட்டிப்பட்டி: சேலம் அம்மாபேட்டை ரவுண்டானா பகுதியை சேர்ந்தவர் ஜோதி, 57; இவரது தந்தை பங்காருநாயுடு, தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மெணசி ஜீவா நகரில் வசித்து வந்தார். இவர், கடந்த வாரம் உடல் நலக்குறைவால் இறந்தார். அவரது காரியத்திற்கு ஜோதி, அவரது மகன் மணிகண்டன், 38, மற்றும் குடும்பத்தினர் நேற்று முன்தினம் ஜீவா நகருக்கு வந்தனர்.
அங்கு ஜோதியின் தம்பி ரவி என்பவரது தோட்டத்து வீட்டில் தங்கினர். மாலை, 4:00 மணிக்கு மணிகண்டன் அங்கிருந்த கிணற்றை எட்டி பார்த்தபோது கால் தவறி உள்ளே விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்புத்துறையினர் கிணற்றில் இருந்து மணிகண்டன் உடலை மீட்டனர். பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.