/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கிரானைட் சரிந்து கடைக்காரர் சாவு
/
கிரானைட் சரிந்து கடைக்காரர் சாவு
ADDED : ஆக 04, 2025 08:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தர்மபுரி டவுன் காந்திநகரை சேர்ந்த சங்கர், 37, இவர் ராஜாபேட்டையில் கிரானைட் கற்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் காலை, 11:30 மணிக்கு சங்கர் கடையில் இருந்த, கிரானைட் கற்களை நகர்த்தி வைக்க முயன்றார்.
அப்போது, கிரானைட் கல் அவர் மீது, சரிந்து விழுந்ததில் படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சங்கர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.