/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மயான கொள்ளை திருவிழா தேர்; பாலாற்றில் கவிழ்ந்ததால் பரபரப்பு
/
மயான கொள்ளை திருவிழா தேர்; பாலாற்றில் கவிழ்ந்ததால் பரபரப்பு
மயான கொள்ளை திருவிழா தேர்; பாலாற்றில் கவிழ்ந்ததால் பரபரப்பு
மயான கொள்ளை திருவிழா தேர்; பாலாற்றில் கவிழ்ந்ததால் பரபரப்பு
ADDED : மார் 11, 2024 07:03 AM
வேலுார் : வேலுாரில் நடந்த மயான கொள்ளை திருவிழாவில், 60 அடி உயர தேர் கவிழ்ந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
வேலுார் மாவட்டத்தில், நேற்று முன்தினம் நள்ளிரவு வரை, மயான கொள்ளை திருவிழா பல்வேறு பகுதியில் நடந்தது. இதையொட்டி வேலுார் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து, 50க்கும் மேற்பட்ட கோவில்களில் இருந்து அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மன் தேர் மற்றும் பல்வேறு வாகனங்களில் வேலுாரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, பாலாறு சென்றடைந்தது. அம்மன் ஊர்வலத்தை காண, 10,000க்கும் மேற்பட்டோர் பாலாற்றில் குவிந்தனர். நள்ளிரவு, 12:00 மணி வரை விழா நடந்தது. அதன்பின் அலங்கரிக்கப்பட்ட தேர் மற்றும் வாகனத்தில் கொண்டு வரப்பட்ட அங்காளம்மன் சுவாமி மீண்டும், அந்தந்த பகுதி கோவிலுக்கு திரும்பின.
இதில் மோட்டூர் திரும்பிய, 60 அடி உயர அங்காளம்மன் தேர், பாலாற்று பகுதியில் கவிழ்ந்தது. இந்த இடிபாடுகளில் மோட்டூரை சேர்ந்த விமல்ராஜ், 30, சிக்கினார். பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் அவரை மீட்டு, வேலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

