/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மாநில தரை வளைகோல் பந்து போட்டி கிரீன் பார்க் பள்ளி மாணவர்கள் சாதனை
/
மாநில தரை வளைகோல் பந்து போட்டி கிரீன் பார்க் பள்ளி மாணவர்கள் சாதனை
மாநில தரை வளைகோல் பந்து போட்டி கிரீன் பார்க் பள்ளி மாணவர்கள் சாதனை
மாநில தரை வளைகோல் பந்து போட்டி கிரீன் பார்க் பள்ளி மாணவர்கள் சாதனை
ADDED : ஆக 24, 2025 01:22 AM
பாப்பிரெட்டிப்பட்டி, கடத்துார் கிரீன் பார்க் இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், காஞ்சிபுரத்தில் நடந்த, 3 நாள் மாநில அளவிலான தரை வளை கோல் பந்து போட்டி யில், 14 மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் பங்கேற்றனர்.
இதில் மாணவியருக்கான போட்டியில் மாநில அளவில், 2ம் இடத்தையும், வெள்ளி பக்கத்தையும் வென்றனர். மாணவர்களுக்கான போட்டியில், 3ம் இடத்தை பிடித்து, வெண்கல பதக்கம் வென்றனர்.
இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியரையும், வெற்றி பெற உறுதுணையாக இருந்த உடற்கல்வி ஆசிரியர்கள் விஜயன், சக்திவேல் ஆகியோரையும், பள்ளியின் தாளாளர் எவரெஸ்ட் முனிரத்தினம், துணை தாளாளர் பூவிழி முனிரத்தினம், நிர்வாக அலுவலர் ராஜா, மெட்ரிக் பள்ளி முதல்வர் சதானந்தம், சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர் மற்றும் கிருஷ்ண
கிரி கிரீன் பார்க் கல்வி நிறுவன கண்காணிப்பாளர் கோகுல் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.