/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
காவலர் தினத்தை முன்னிட்டு தர்மபுரியில் துப்பாக்கி கண்காட்சி
/
காவலர் தினத்தை முன்னிட்டு தர்மபுரியில் துப்பாக்கி கண்காட்சி
காவலர் தினத்தை முன்னிட்டு தர்மபுரியில் துப்பாக்கி கண்காட்சி
காவலர் தினத்தை முன்னிட்டு தர்மபுரியில் துப்பாக்கி கண்காட்சி
ADDED : செப் 07, 2025 01:07 AM
தர்மபுரி, தர்மபுரி ஆயுதப்படை மைதானத்தில், காவலர் தினத்தை முன்னிட்டு, துப்பாக்கி கண்காட்சியை மாவட்ட எஸ்.பி., மகேஷ்வரன் நேற்று தொடங்கி வைத்தார்.
நாடு முழுவதும் அக்., 21ல், தேசிய காவலர் தினம் கொண்டாடப்படுகிறது. அதேபோல், தமிழகத்தில் செப்., 6ல், தமிழக காவலர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி, நேற்று தர்மபுரி ஆயுதப்படை மைதானத்தில், காவலர் தினம் கொண்டாடப்பட்டது.
முன்னதாக, தர்மபுரி மாவட்டத்தில் பணியின் போது உயிரிழந்த போலீசார் நினைவாக, அவர்களின் நினைவு துாணுக்கு தர்மபுரி மாவட்ட எஸ்.பி., மகேஷ்வரன், ஏ.டி.எஸ்.,பிக்கள் ஸ்ரீதரன், பாலசுப்ரமணியம் ஆகியோர் மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, ஆயுதப்படை போலீசார் சார்பில், ஏற்பாடு செய்யப்பட்ட துப்பாக்கி கண்காட்சியை எஸ்.பி., தொடங்கி வைத்தார்.
இதில், 303, எஸ்.எல்.ஆர்., இன்சாஸ், ஏகே.47, பிஸ்டல்கள் மற்றும் போலீசார் பயன்படுத்தும் பல்வேறு வகையான துப்பாக்கிகள் காட்சிப்படுத்தப்பட்டன. பள்ளி கல்லுாரி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்களுக்கு ஆயுதப்படை எஸ்.ஐ.,
சின்னசாமி துப்பாக்கி மாடல்கள் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்து, விளக்கம் அளித்தார். தொடர்ந்து, போலீசார் குடும்பத்தினருக்கு இலவச மருத்துவ முகாம் நடத்தது. இதேபோல், தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, அரூர் உள்ளிட்ட சப்-----
டிவிஷனில் காவலர் தினத்தை போலீசார் கொண்டாடினர்.