ADDED : செப் 20, 2024 01:35 AM
தர்மபுரி, செப். 20-
தர்மபுரி அருகே, பிரியாணி கடை ஊழியர் கொலை வழக்கில், 5 பேர்
மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
தர்மபுரி அடுத்த, இலக்கியம்பட்டியில், பிரியாணி கடை ஒன்றில் பணியாற்றியவர் முகமது ஆசிக், 25. இவரது காதல் விவகாரம் தொடர்பாக, சேலம் மாவட்டம், ஓமலுாரை சேர்ந்த இளம்பெண்ணின் சகோதரர்கள் உள்ளிட்டோர், கடந்த ஜூலை, 26- அன்று, கடையிலிருந்த முகமது ஆசிக்கை குத்தி கொன்றனர். இந்த வழக்கு தொடர்பாக, ஓமலுாரை சேர்ந்த ஜனரஞ்சன், 27, ஜன அம்சபிரியன், 27, கவுதம், 28, ராஜ்குமார், 25, தர்மபுரி மாவட்டம், சிவாடியை சேர்ந்த பரிதிவளவன், 24, ஆகிய, 5 பேரை போலீசார் ஜூலை, 28- அன்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், குற்றத்தின் தன்மையை கருத்தில் கொண்டு, 5 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய பரிந்துரை படி, மாவட்ட கலெக்டர் சாந்தி உத்தரவிட்டார். இதையடுத்து, சிறையிலுள்ள, 5 பேரிடமும், அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளதற்கான நகல் வழங்கப்பட்டது.