ADDED : மார் 01, 2026 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., முருகன் உட்பட போலீசார் நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு கிருஷ்ணகிரி - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில், கும்-பாரஹள்ளி சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்-டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த, கர்நாடக மாநில பதிவெண் கொண்ட அசோக் லேலண்ட் தோஸ்த் சரக்கு வாக-னத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 131 கிலோ எடை கொண்ட, 2.38 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. புகையிலை பொருட்கள் மற்றும் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்து, வாகனத்தை ஓட்டி வந்த கர்நாடகா மாநிலம், காகேபுரா கிராமத்தை சேர்ந்த மகேஷா, 29, என்பவரை போலீசார் கைது செய்தனர்.

