ADDED : மார் 01, 2026 04:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தேசிய இளைஞர், காங்., தலைவர் உதய்பானு சிப் கைதை கண்-டித்து, தர்மபுரி மாவட்ட இளைஞர், காங்., சார்பில், தர்மபுரி பி.எஸ்.என்.எல்., அலுலகம் அருகே, நேற்று கண்டன ஆர்ப்-பாட்டம் நடந்தது.
இளைஞர், காங்., மாவட்ட தலைவர் வெற்றி-வேந்தன் தலைமை வகித்தார். தர்மபுரி மாவட்ட காங்., தலைவர் சிற்றரசு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில், சேலம் மேற்கு மாவட்ட இளைஞர், காங்., தலைவர் திருமலைவாசன், சக்திவேல் உட்பட கட்சி நிர்வாகி
கள், இளைஞர், காங்., பொறுப்பாளர்கள் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இதில், தேசிய இளைஞர், காங்., தலைவர் கைதை கண்டித்து, கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

