/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கூட்டுறவு துறையில் உதவியாளர் பணி எழுத்து தேர்வுக்கு 'ஹால் டிக்கெட்'

ADDED : அக் 07, 2025 01:43 AM
தர்மபுரி, தர்மபுரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கை:-
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களில், தர்மபுரி மண்டலத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு, வரும், 11ம் தேதியன்று காலை, 10:00 மணிக்கு நடக்க உள்ள எழுத்து தேர்விற்கான, 'ஹால் டிக்கெட்' தர்மபுரி மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்தில், https://www.drbdharmapuri.net வெளியிடப்படட்டு உள்ளது. எனவே, விண்ணப்பதாரர்கள் தங்களது நுழைவுச்சீட்டை, தற்போது பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால்,
தர்மபுரி மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய கட்டுப்பாட்டு அறை தொலைபேசி, 0434 2233803 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.