/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஒருகால பூஜை கோவில்களில் அரசின் அறிவிப்பு பலகை
/
ஒருகால பூஜை கோவில்களில் அரசின் அறிவிப்பு பலகை
ADDED : அக் 07, 2025 01:42 AM
தேன்கனிக்கோட்டை, தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, கெலமங்கலம் சுற்றுப்புற பகுதிகளில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், 149 கோவில்கள் உள்ளன. இதில், 98 கோவில்களில் தினமும் ஒருகால பூஜை நடக்கிறது. இக்கோவில்களுக்கு ஒரு கால பூஜை திட்டத்தில், தமிழக அரசு மூலம், கோவில் பெயரில் அரசு வைப்பு நிதியாக, 2.50 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த வைப்பு நிதி மூலம் வரும் வட்டி தொகையான, 1,000 ரூபாய், பூசாரிகளுக்கு மாத ஊதியமாக வழங்கப்படுகிறது. இத்திட்டம் குறித்து, பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில், ஒரு கால பூஜை நடக்கும், 98 கோவில்களிலும் அறிவிப்பு பலகை வைக்க, அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, 98 கோவில்களுக்கும் அறிவிப்பு பலகையை, தேன்கனிக்கோட்டை ஹிந்து சமய அறநிலையத்துறை சரக ஆய்வாளர் வேல்ராஜ் வழங்கி வருகிறார்.