/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஆபாசமாக பேசும் மின்வாரிய ஏ.இ., ஏ.எஸ்.பி.,யிடம் பெண் ஊழியர் புகார்
/
ஆபாசமாக பேசும் மின்வாரிய ஏ.இ., ஏ.எஸ்.பி.,யிடம் பெண் ஊழியர் புகார்
ஆபாசமாக பேசும் மின்வாரிய ஏ.இ., ஏ.எஸ்.பி.,யிடம் பெண் ஊழியர் புகார்
ஆபாசமாக பேசும் மின்வாரிய ஏ.இ., ஏ.எஸ்.பி.,யிடம் பெண் ஊழியர் புகார்
ADDED : அக் 07, 2025 01:42 AM
ஓசூர்,ஓசூரில், மின்வாரிய உதவி பொறியாளர், தன்னிடம் ஆபாசமாக பேசி வருவதாக, பெண் கணக்கீட்டாளர், ஏ.எஸ்.பி.,யிடம் புகார் மனு வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மின்வாரிய அலுவலகத்தில் கணக்கீட்டாளராக, 12 ஆண்டுகளாக பணியாற்றும், 35 வயது பெண் ஊழியர், ஓசூர் ஏ.எஸ்.பி., அக்சய் அணில் வாகரேவிடம் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
என் கணவர் கடந்த, 2013 மார்ச், 6ல் உயிரிழந்து விட்டார். எனக்கு, 14 வயதில் மகன் உள்ளார். நான் பணிபுரியும் இடத்தில் உதவி பொறியாளராக பணியாற்றும் நபர், என்னிடம் கடந்த, 6 மாதமாக தவறாக நடக்க முயற்சி செய்கிறார். தினமும் என்னை அவர் முன், ஒரு மணி நேரம் வரை நிற்க வைத்து ஆபாசமாக பேசுவதும், தகாத வார்த்தையால் திட்டுவதிலும் ஈடுபடுகிறார். அலுவலக ஊழியர்களிடம் பேசினால், 'அவர்களிடம் என்ன பேச்சு' என கேவலமாக பேசுவதுடன், 'கள்ளத்தொடர்பு உள்ளதா' என கேட்கிறார்.
மேலும், 'சொன்னபடி கேட்கவில்லை என்றால், உயிரோடு விட் டு வைக்க மாட்டேன். உன்னையும், உன் குடும்பத்தையும் கொளுத்தி விடுவேன்' என, கொலை மிரட்டல் விடுகிறார். நேற்று என்னை என் சமுதாயத்தை குறிப்பிட்டு கொச்சைப்படுத்தி பேசியதுடன், தன்னுடன் நெருக்கமாக இருக்க வருமாறு, கொச்சையாக பேசினார். இதை தட்டிக்கேட்ட ஊழியர்களை தாக்கினார். இதனால் அலுவலகத்தில் பிரச்னை ஏற்பட்டது.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.
மனுவை பெற்றுக்கொண்ட ஏ.எஸ்.பி., அக்சய் அணில் வாகரே, ஓசூர் அனைத்து மகளிர் ஸ்டேஷனுக்கு அனுப்பி, உரிய நடவடிக்கை எடுக்க, இன்ஸ்பெக்டர் பங்கஜத்திற்கு உத்தரவிட்டார்.