/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மாணவர்களுக்கு 2ம் பருவ பாட புத்தகங்கள்
/
மாணவர்களுக்கு 2ம் பருவ பாட புத்தகங்கள்
ADDED : அக் 07, 2025 01:42 AM
தர்மபுரி, தர்மபுரி மாவட்டத்தில், பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, நேற்று பள்ளி கள் திறக்கப்பட்டன. இதையடுத்து, மாவட்டம் முழுவதும் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், 6ம் வகுப்பு மற்றும், 7ம் வகுப்பு படிக்கும், 17,855 மாணவ, மாணவியருக்கு, 2ம் பருவ தேர்வுக்கான இலவச பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன. இதேபோல், தொடக்ககல்வி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்க்கும் நேற்று பாடபுத்தகங்கள் வழங்கப்பட்டன.
தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும், 6, 7ம் வகுப்பு படிக்கும், 800க்கும் மேற்பட்ட மாணவியருக்கு, 2ம் பருவ தேர்வுக்கான இலவச பாடபுத்தகங்களை பள்ளி தலைமையாசிரியை சுதா நேற்று வழங்கினார். அதேபோல், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும், 3,000 மாணவியருக்கு நோட்டுகளை வழங்கினார்.
* பென்னாகரம் அடுத்த சின்னபள்ளத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு, 2ம் பருவ பாடப்புத்தகம் மற்றும் நோட்டுகள் வழங்கப்பட்டன. தலைமையாசிரியர் பழனி தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவி கங்கா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மாதன், ஆசிரியர்கள் வளர்மதி, பழனிச்செல்வி, கல்பனா, கலைச்செல்வி, ராஜேஸ்வரி, அனுப்பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.