ADDED : மார் 28, 2026 05:50 AM
தர்மபுரி; தர்மபுரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிக-ரித்த நிலையில், நேற்று அதிகபட்சமாக, 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, நல்லம்பள்ளி, இண்டூர், பென்னாகரம், பாலக்கோடு, பாப்பாரப்-பட்டி, காரிமங்கலம், பொம்மிடி, மொரப்பூர் உள்-ளிட்ட பகுதிகளில், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. நேற்று முன்தினம், 97.1 பாரன்ஹீட் வெப்பநிலை பதிவான நிலையில், நேற்று மேலும் அதிகரித்து, 100 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவானது. குறைந்தபட்சமாக, 21.2, அதிகபட்சமாக, 36.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. அதிகப்படி-யான வெயிலின் தாக்கத்தால், மதிய நேரத்தில் -பெங்களூரு - சேலம், ஓசூர் - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் தர்மபுரி நகர பகுதியில் வாகன போக்குவரத்து குறைந்து, சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
