/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரி மாவட்டத்தில் கடும் பனிபொழிவு
/
தர்மபுரி மாவட்டத்தில் கடும் பனிபொழிவு
ADDED : ஜன 15, 2024 11:22 AM
தர்மபுரி: மார்கழி மாத இறுதியில் நிலவிய, கடும் பனிப்பொழிவு சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை முழுமையாக மூடியதால், வாகன
ஓட்டிகள் அவதியடைந்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில், கடந்த சில மாதங்களில் பரவலாக மிதமான மழையே பெய்தது. இதனால், தர்மபுரி, நல்லம்பள்ளி, அதியமான்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் நீரின்றி வறண்டு கிடக்கிறது. இதனால், மார்கழி மாதத்தில் பனிப்பொழிவு ஒரு சில நாட்களில் மட்டுமே இருந்தது.
இந்நிலையில், மார்கழி மாதத்தின் கடைசி நாளான நேற்று, தர்மபுரி மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளான பாளையம்புதுார், வெள்ளக்கல், தொப்பூர், அதியமான் கோட்டை, இண்டூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதல் கடுமையான குளிர் மற்றும் மூடுபனி நிலவியது.
சேலம் - பெங்களூரு, தேசிய நெடுஞ்சாலையை முழுமையாக மூடிய மூடுபனியால், வாகன ஓட்டிகள் வாகனத்தை குறைந்த வேகத்திலேயே இயக்கினர். மேலும், முன்னாள் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு, மூடுபனி நிலவியதால், தங்கள் வாகனத்தின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே ஓட்டிச் சென்றனர்.