/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கடத்துாரில் கடும் பனிப்பொழிவு மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
/
கடத்துாரில் கடும் பனிப்பொழிவு மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கடத்துாரில் கடும் பனிப்பொழிவு மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கடத்துாரில் கடும் பனிப்பொழிவு மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ADDED : டிச 21, 2025 06:49 AM
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி, பகுதிகளில் கடும் பனிப்பொ-ழிவால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்துார் பகுதி-களில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. மழை நின்றதால், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் கடுங்குளிர் நிலவி வருகிறது.
பல்வேறு இடங்களில் பனி பொழிவு தொடங்கி-யுள்ளது. நேற்று கடத்துார் அடுத்த புட்டிரெட்டிப்-பட்டி, இராமியம்பட்டி, தென்கரை கோட்டை, முத்-தம்பட்டி உள்ளிட்ட பகுதியில் கடும் பனிப்பொ-ழிவு ஏற்பட்டது. அதிகாலை போலவே காலை, 9:00 மணி ஆகியும் பனிமூட்டம் குறையவில்லை. எதிரே வரும் ஆட்கள் தெரியாத அளவிற்கு சாலைகளில் னிப்பொழிவு அதிகமாக காணப்பட்டது. புட்டிரெட்டிப்பட்டி ரயில்வே ஸ்டேஷனில், சிக்னல் விளக்குகள் தெரியாததால், ரயில்கள் முகப்பு விளக்கை ஏரிய விட்டு சென்றது. இந்த கடும் பனிமூட்டம் காரணமாக, வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.