/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட மருத்துவ முகாம்
/
'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட மருத்துவ முகாம்
ADDED : டிச 21, 2025 06:48 AM
அஞ்செட்டி: கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அரசு மேல்-நிலைப்பள்ளி வளாகத்தில், 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட மருத்துவ முகாம் நேற்று நடந்-தது. தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், முகாமை பார்வையிட்டு, மாற்றுத்திறனாளிக-ளுக்கு தேசிய அடையாள அட்டை, முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகளை வழங்கினார். முகாமில், ஆயிரக்கணக்கான மக்கள் பதிவு செய்து, இலவசமாக மருத்துவ பரி-சோதனை செய்து கொண்டு, மருந்து, மாத்திரை-களை பெற்று கொண்டனர்.
உயர் மருத்துவ சிகிச்சை தேவைப்படுபவர்கள், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்-டத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனை-களில் சிகிச்சை பெற பரிந்துரை செய்யப்பட்டனர்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தொழிலாளர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகளை, எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் வழங்கினார்.

