தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ பணி நிரந்தரம் கோரி செவிலியர் தொடர் காத்திருப்பு போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியர் தொடர் காத்திருப்பு போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியர் தொடர் காத்திருப்பு போராட்டம்


ADDED : டிச 21, 2025 06:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 21, 2025 06:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி: செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முன், 2வது நாளாக தொடர் காத்-திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, தி.மு.க., தேர்தல் அறிக்கையில், தொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியர்க-ளுக்கு, ஆட்சிக்கு வந்தால், பணி நிரந்தரம் செய்வ-தாக வாக்குறுதி அளித்தனர். ஆனால், தி.மு.க., ஆட்சி நிறைவடையும் நிலையில், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும், என்ற நீதிமன்ற உத்தரவை கூட நிறைவேற்-றாமல், செவிலியர்களுக்கு எதிராக, நீதிமன்-றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்த அவலம் ஏற்பட்டுள்ளது. முறைப்படி மருத்துவ தேர்வு வாரியம் மூலம், பணியில் அமர்த்தப்பட்டு கடந்த, 10 ஆண்டுகளாக தொகுப்பூதியம் அடிப்படையில் பணி செய்து வருகிறோம்.

எனவே, தி.மு.க.,வின், 356வது வாக்குறுதியின் படி, செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கொரோனா கால கட்டத்தில், பணி-நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்களை, மீண்டும் பணியமர்த்த வேண்டும். மேலும், சென்னையில் போராடி வரும் செவிலியர்களை கைது செய்யக்-கூடாது என, பல்வேறு கோரிக்கைகளை வலியு-றுத்தி, நேற்று, 2வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us