/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தொப்பூரில் உயர்மட்ட பாலம்: முதற்கட்ட பணிகள் தொடக்கம்
/
தொப்பூரில் உயர்மட்ட பாலம்: முதற்கட்ட பணிகள் தொடக்கம்
தொப்பூரில் உயர்மட்ட பாலம்: முதற்கட்ட பணிகள் தொடக்கம்
தொப்பூரில் உயர்மட்ட பாலம்: முதற்கட்ட பணிகள் தொடக்கம்
ADDED : ஏப் 27, 2025 04:24 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் பகுதியில், 775 கோடி ரூபாய் மதிப்பில், உயர் மட்ட மேம்பால பணிக்கான, முதல்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரியை இணைக்கும் மிக முக்கிய சாலைகளில் ஒன்றாக ஓசூர், தர்மபுரி, சேலம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை என்.எச்., 44 அமைந்துள்ளது. இதில், தர்ம-புரி மாவட்டம், தொப்பூர் மலைப்பாதை பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்-பட்டு வருகிறது. குறிப்பாக, தொப்பூர் மலைப்பாதையில், 8 கி.மீ., தாழ்வாகவும், வளைவாகவும் அமைக்கப்பட்ட சாலையால் அடிக்கடி விபத்து நடந்து பல உயிர் பலிகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக தொப்பூர் மலைப்பாதையில், 2010 முதல், 2024 வரை நடந்த, 952 விபத்துக்களில், 310 பேர் பலியாகியும், 1,000 பேர் படுகாயமும் அடைந்தனர். இதை தடுக்க, உயர்மட்ட மேம்பாலம் அமைக்க, தர்மபுரி முன்னாள் எம்.பி.,க்கள் அன்புமணி, செந்தில்குமார் ஆகியோர் தொடர்ந்து, மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து வலியுறுத்தினர். இதையடுத்து, தொப்பூர் மலைப்பாதையில், உயர் மட்ட மேம்பாலம் அமைக்க மத்திய அரசால், 775 கோடி ரூபாய் மதிப்பில், டெண்டர் விடப்-பட்டது.
இதில், உயர்மட்ட மேம்பாலம் அமைய உள்ள, தொப்பூர் மலைப்பாதை கட்டமேட்டிலிருந்து, 6.60 கி.மீ., துாரம் வரை, புதிய உயர்மட்ட சாலை அமைகிறது. உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் திட்டத்தில், தொப்பூர் கணவாய் மலைப்பகுதி சாலை, 6 வழிச்சாலையாக மாற்றி அமைக்கப்பட உள்ளது. தற்-போதுள்ள, தர்மபுரி - சேலம் இடதுப்புற சாலை மேம்பாலத்-துடன், குறுகிய வளைவுகள் இன்றி விரிவாக்க
த்துடன், 3 வழி சாலையாக அமைக்கப்படும். மேலும், தரைவழி பாலம் மற்றும் சர்வீஸ் சாலைகள் தொப்பூர், மேட்டூர் ஆஞ்சநேயர் கோவில் செல்வதற்கும் மற்றும் 'யூ' வடிவில் கட்டப்பட உள்ளன. இத்திட்ட பணிக்காக தர்மபுரி மாவட்டத்தில், 2.70 ஹெக்டேர், சேலம் மாவட்டத்தில், 1.70 ஹெக்டேர் மற்றும் வனத்துறை, 13 ஹெக்டேர் நிலமும் கையகப்படுத்தபட்டது. தற்காலிகமாக, விபத்து தடுப்பு நடவடிக்கையாக, பழைய சாலையிலுள்ள, இரட்டை பாலத்தின், தர்மபுரி -- சேலம் இடது புற சாலையை, 5.50 மீட்டர் அகலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேம்பால பணியை, டெண்டர் எடுத்துள்ள தனியார் நிறுவனம், முதற்கட்டமாக தொப்பூர் கட்டமேடு பகு-தியில் பணிகளை தொடங்கியுள்ளது. அதேபோல், போலீஸ் கோட்ரஸ் பகுதியில், பில்லர் அமைக்க, ராட்சத இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதில், உயர்மட்ட மேம்பால கட்டுமான பணிகள், 3 ஆண்டுகளில் முடிக்-கப்படும் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.