ADDED : மார் 14, 2024 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் கடத்துார் பேரூராட்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா, 6.50 லட்சம் ரூபாய் மதிப்பில், உயர்மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டன.
இதை நேற்று தர்மபுரி, தி.மு.க., - எம்.பி., டாக்டர் செந்தில்குமார் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். தொடர்ந்து பாப்பிரெட்டிப்பட்டி யூனியன் அலுவலகம் எதிரில், 16 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய நிழற்கூடம் கட்ட அடிக்கல் நாட்டினார். பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி தலைவர் மாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

