/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் தீப்பந்தம் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்
/
நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் தீப்பந்தம் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்
நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் தீப்பந்தம் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்
நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் தீப்பந்தம் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 30, 2025 02:00 AM
கரூர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நெடுஞ்சாலை துறை பணியாளர்கள், தீப்பந்தம் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் செவிந்தி லிங்கம் தலைமையில், கோட்ட பொறியாளர் அலுவலகம் முன், நேற்று மாலை ஆர்ப்பா ட்டம் நடந்தது.
அதில், சாலை பணியாளர்களின், 41 மாத கால பணி நீக்க காலத்தை, பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும், கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும், மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைக்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி, இணை செயலாளர் ராமமூர்த்தி, பொருளாளர் சிவக்குமார் உள்பட பலர் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.