/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மாணவர்களை கால்பிடித்து விடச்சொன்ன ஹெச்.எம்., மாற்றம்
/
மாணவர்களை கால்பிடித்து விடச்சொன்ன ஹெச்.எம்., மாற்றம்
மாணவர்களை கால்பிடித்து விடச்சொன்ன ஹெச்.எம்., மாற்றம்
மாணவர்களை கால்பிடித்து விடச்சொன்ன ஹெச்.எம்., மாற்றம்
ADDED : செப் 03, 2025 01:23 AM
அரூர்:அரசு பள்ளி தலைமையாசிரியைக்கு, மாணவர்கள் கால் பிடித்துவிட்ட வீடியோ பரவிய நிலையில், தலைமையாசிரியை இடமாற்றம் செய்யப்பட்டார்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த மாவேரிப்பட்டியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், தலைமையாசிரியை கலைவாணி உட்பட இருவர் பணிபுரிகின்றனர். மாணவ - மாணவியர் சிலர், வகுப்பறை பெஞ்சில் படுத்திருக்கும் கலைவாணியின் கை, கால்களை அமுக்கி விடும் வீடியோ பரவியது. நேற்று காலை பள்ளியை பெற்றோர், பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
அரூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் விஜயகுமார், பள்ளியில் கலைவாணி, மாணவ - மாணவியர், பெற்றோரிடம் விசாரித்தார். அப்போது, பெற்றோர், 'நீண்ட காலமாக கலைவாணி இப்படி செய்து வருகிறார்.
இதை பெற்றோரிடம் சொல்லக்கூடாது என, மிரட்டி வந்துள்ளார். காய்கறி, மருதாணி அரைத்து எடுத்து வரச்சொல்வது, பள்ளியில் துாய்மை பணி மேற்கொள்வது என, பல்வேறு வேலைகளை செய்ய சொல்லியுள்ளார்' என, அடுக்கடுக்கான குற்றச்சாட்டை முன் வைத்தனர்.
இதையடுத்து, கலைவாணியை வேறு பள்ளிக்கு இடமாறுதல் செய்து, அரூர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் விஜயகுமார் உத்தரவிட்டார்.