ADDED : ஜூலை 03, 2025 10:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த, 16 வயது மாணவி, கடகத்துார் ஐ.டி.ஐ., கல்லுாரியில் முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த மாதம், 25ல் மாணவி மாயமானார். பெற்றோர் புகார் படி, பாப்பாரப்பட்டி போலீசார் விசாரித்தனர்.
இந்நிலையில், தர்மபுரி ஊர்காவல் படையில் பணிபுரிந்த, தொப்பூரை சேர்ந்த ரஞ்சித்குமார், 23, மாணவியை கடத்திச்சென்று, திருமணம் செய்தது தெரியவந்தது. பென்னாகரம் மகளிர் போலீசார் அவரை போக்சோவில் நேற்று முன்தினம் கைது செய்தனர்.