/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
குடிநீர் பிரச்னைக்கு தீர்வு ஓசூர் மாநகர மேயர் உறுதி
/
குடிநீர் பிரச்னைக்கு தீர்வு ஓசூர் மாநகர மேயர் உறுதி
குடிநீர் பிரச்னைக்கு தீர்வு ஓசூர் மாநகர மேயர் உறுதி
குடிநீர் பிரச்னைக்கு தீர்வு ஓசூர் மாநகர மேயர் உறுதி
ADDED : ஏப் 17, 2025 01:49 AM
ஓசூர்:ஓசூர் மாநகராட்சி, 21வது வார்டுக்கு உட்பட்ட கொத்துார், பாலபூமி சிட்டி, ஏ.வி.எஸ்., ஹவுசிங் காலனி, மத்தம் அக்ரஹாரம் ஆகிய பகுதிகளில், கழிவு நீர் கால்வாய், தார்ச்சாலை, குடிநீர் பிரச்னை இருப்பதாக, அப்பகுதி மக்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர். இதையடுத்து, ஓசூர் மாநகர மேயர் சத்யா நேற்று ஆய்வு செய்தார்.
அதேபோல், 17வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளிலும் ஆய்வு செய்த அவர், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான தார்ச்சாலை, சாக்கடை கால்வாய், குடிநீர் பிரச்னை ஆகியவற்றுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மண்டல தலைவர் ரவி, உதவி பொறியாளர் பிரபாகரன், கவுன்சிலர் மஞ்சுநாத் உட்பட பலர் உடனிருந்தனர்.