ADDED : அக் 07, 2024 03:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதிகோன்பாளையம்: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த, பி.பள்ளிபட்டியை சேர்ந்தவர் தம்பிதுரை, 30. இவர், ஓசூரிலுள்ள பிரியாணி கடை ஒன்றில் பணியாற்றி வந்தார். கடந்த, 4 அன்று அவருடைய பஜாஜ் பல்சர் பைக்கில், தர்மபுரி - மொரப்பூர் சாலையில், இரவு, 8:45 மணிக்கு குன்செட்டிஹள்ளி அருகே வந்தபோது, சாலை நடுவேயுள்ள சென்டர் மீடியனில் மோதி சாலையில் வலது புறம் விழுந்தார்.
அப்போது, மொரப்பூரில் இருந்து, தர்மபுரி நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். புகார் படி, மதிகோன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

