/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அ.தி.மு.க.,வினர் மனித சங்கிலி போராட்டம்
/
அ.தி.மு.க.,வினர் மனித சங்கிலி போராட்டம்
ADDED : மார் 13, 2024 07:38 AM
தர்மபுரி : தமிழகத்தில் பெருகி வரும் போதை பொருட்கள் புழக்கத்தை உடனடியாக கட்டுப்படுத்த வலியுறுத்தியும், தமிழகம் போதை பொருட்களின் கேந்திரமாக மாறி, வருங்கால தலைமுறையினரின் வாழ்க்கை சீரழிந்து வருவதை கண்டித்தும், இதற்கு காரணமான, தி.மு.க., அரசை கண்டித்தும், தர்மபுரி நகராட்சி மற்றும், 10 பேரூராட்சிகளில், அ.தி.மு.க., சார்பில், மனித சங்கிலி போராட்டம் நேற்று நடந்தது.
தர்மபுரி நகரில், ராஜகோபால் கவுண்டர் பூங்கா அருகில் நடந்த, போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அன்பழகன் தலைமை வகித்தார். நகர செயலாளர் பூக்கடை ரவி வரவேற்றார். மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் வெற்றிவேல் முன்னிலை வகித்தனர். இதில், தமிழக அரசை கண்டித்தும், போதை பொருட்கள் நடமாட்டத்தை முழுமையாக கட்டுப்படுத்த வலியுறுத்தியும், கோஷங்கள் எழுப்பினர். நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் சிவபிரகாசம் நன்றி கூறினார்.
* பாப்பிரெட்டிப்பட்டி, பொ.மல்லாபுரம், கடத்துார் ஆகிய பேரூராட்சிகளில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இதில், பாப்பிரெட்டிப்பட்டி, எம்.எல்.ஏ., கோவிந்தசாமி பேசினார். நிர்வாகிகள் ராஜேந்திரன், நல்லத்தம்பி, ஒன்றிய செயலாளர்கள் விஸ்வநாதன், மதிவாணன், சேகர், முருகன், பேரூர் செயலாளர்கள் தென்னரசு, ராஜா, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
* அரூர் பஸ் ஸ்டாண்டில் நடந்த போராட்டத்துக்கு, அரூர், எம்.எல்.ஏ., சம்பத்குமார் தலைமை வகித்தார். இதில், தி.மு.க., அரசை கண்டித்து, கோஷங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தில், தெற்கு ஒன்றிய செயலாளர் பசுபதி, நகர செயலாளர் பாபு, சிவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதேபோல் கம்பைநல்லுாரிலும் மனித சங்கிலி போராட்டம்
நடந்தது.

