ADDED : ஜன 07, 2025 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மனைவியை கொன்ற கணவர் கைது
ஓசூர்: ஓசூர் அடுத்த பாகலுார் அருகே கீழ் சூடாபுரம் பெரியார் நகரை சேர்ந்தவர் ஆனந்தகுமார், 40. பெயின்டர்; இவர் மனைவி கல்பனா, 38. குடும்ப பிரச்னையால் கடந்த, 4ல் ஆனந்தகுமார், பிளேடால் கல்பனாவின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். கல்பனா மகன் சேட்டன்குமார், 19, புகார் படி, போலீசார் தப்பியோடிய ஆனந்தகுமாரை தேடி வந்தனர். இந்நிலையில், பாகலுார் அருகே ஈச்சங்கூர் பஸ் ஸ்டாப் அருகே சுற்றித்திரிந்த ஆனந்தகுமாரை, பாகலுார் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பிரகாஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று மாலை கைது செய்தனர்.