/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
4 வழிச்சாலை விரிவாக்க பணி விரைவுபடுத்த சரக்கு வாகனத்திற்கு தடை விதிக்க யோசனை

ADDED : நவ 14, 2024 07:04 AM
பாப்பிரெட்டிப்பட்டி: சேலம் - அரூர் தேசிய நெடுஞ்சாலையில், ஏ.பள்ளிப்பட்டி முதல் மஞ்சவாடி கணவாய் வரை, 4 வழி சாலை விரிவாக்க பணி, 169.67 கோடி ரூபாய் மதிப்பில், கடந்த பிப்.,ல் தொடங்கி நடந்து வருகிறது. பணி ஆமை வேகத்தில் நடந்து வருவதால், பொது-மக்கள் தொடர்ந்து அவதி அடைந்து வருகின்றனர். மழைக்காலங்-களில் அவ்வழியே வரும் கனரக வாகனங்கள், சேற்றில் சிக்கி கொள்வதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் சாலை பணி நிறுத்தப்படுகிறது.
இதனால், சாலை பணியை விரைவு படுத்த ஏ.பள்ளிப்பட்டி -- -மஞ்சவாடி வழியாக சேலம் செல்லும், சேலத்தில் இருந்து அரூர் நோக்கி வரும் பஸ், கார், பைக் தவிர்த்து, வணிக நோக்கில் செல்லும் கனரக சரக்கு வாகனங்கள்
செல்ல தடை விதிப்பது குறித்து, அரூர் ஆர்.டி.ஓ., சின்னுசாமி, தலைமையில், சேலம் நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் நடராஜன், உதவி கோட்ட பொறியாளர் குலோத்துங்கன், உதவி பொறியாளர் தவ-மணி ஆகியோர்
சாமியாபுரம் கூட்ரோடு, பகுதியில் ஆய்வு செய்து ஆலோசனை மேற்கொண்டனர்.