/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
'டாஸ்மாக்கில் ஊழல் நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும்'
/
'டாஸ்மாக்கில் ஊழல் நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும்'
'டாஸ்மாக்கில் ஊழல் நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும்'
'டாஸ்மாக்கில் ஊழல் நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும்'
ADDED : மார் 31, 2025 01:50 AM
தர்மபுரி: '' டாஸ்மாக்கில், ஊழல் நடந்திருந்தால், நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, இ.கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன் நிரு-பர்களிடம் கூறியதாது:
தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்-கேற்க வந்த, இ.கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்க-ளிடம் கூறியதாது:மத்திய அரசு, கல்வி கொள்கையை ஏற்க, தமிழகத்தை நிர்பந்-திக்கக் கூடாது. தேசிய கல்வி கொள்கையில் மொழி பிரச்னை மட்டுமல்ல, தேர்வு முறையும் தமிழக மாணவர்களை கடுமை-யாக பாதிக்கும். கல்வித்தொகையை வழங்காமல், மாணவர்க-ளையும் ஆசிரியர்களையும் வஞ்சிப்பது கண்டனத்திற்குரியது. ரிசர்வ் வங்கி விதிக்கும் பல நிபந்தனைகள் சாதாரண மக்களை கடுமையாக பாதிக்கிறது.
தமிழகத்திலுள்ள, 9 முக்கிய பிரச்னைகள் குறித்து, உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம், முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., பேசினாரா, அதற்கு அமித்ஷா என்ன பதில் சொன்னார் என்பதை, அவர் பகிரங்க படுத்த வேண்டும். 2026ல், தி.மு.க., ஆட்சியை அகற்றி, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என, அமித்ஷா கூறுவது எதை குறிக்கிறது. நக்சலைட் பாதையை, இ.கம்யூ., ஆதரிக்கவில்லை.
மாறாக அவர்களை சுட்டுக் கொள்வது மனிதாபிமானமற்ற செயல். இந்த நடவடிக்கையை, மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.
தமிழகத்தில் நடக்கும் என்கவுன்டர்களை தவிர்க்க வேண்டும். தமிழகத்தில் மன்னராட்சி நடந்திருந்தால், நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருக்க முடியாது. டாஸ்மாக்கில் ஊழல் நடந்தி-ருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருகிறது.
இதை தடுக்க, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தமிழகத்திலுள்ள, 23 கட்சிகள் இணைந்து, தி.மு.க.,விற்கு ஆதரவு தெரிவித்துள்ளோம், 2026ல் இதே கூட்-டணி தொடரும்.
இவ்வாறு, அவர் கூறினார்.