/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ரூ.9.90 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறப்பு
/
ரூ.9.90 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறப்பு
ரூ.9.90 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறப்பு
ரூ.9.90 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறப்பு
ADDED : டிச 03, 2024 01:43 AM
ரூ.9.90 லட்சத்தில் குடிநீர்
சுத்திகரிப்பு இயந்திரம் திறப்பு
தர்மபுரி, டிச. 2-
நல்லம்பள்ளி ஒன்றியம், பாகலஹள்ளி பஞ்., அலுவலக வளாகத்தில், மனை பிரிவில் வரன்முறை மற்றும் வளர்ச்சிக் கணக்கில் உள்ள இருப்பு தொகை திட்டத்தின் மூலம், 9.90 லட்சம் ரூபாய் மதிப்பில், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நிறைவடைந்தன. இந்நிலையில், தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன் நேற்று, குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை இயக்கி தொடங்கி வைத்தார். இதன் மூலம், ஒரு ரூபாய்க்கு, 1 லிட்டர், 5 ரூபாய்க்கு, 20 லிட்டர் சுத்திகரிக்கபட்ட குடிநீரை பொதுமக்கள் பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யபட்டுள்ளது.
இதில், பாகலஹள்ளி பஞ்., தலைவர் முருகன், துணைத்தலைவர் ரம்யா, கவுன்சிலர்கள் வளர்மதி, காமராஜ், மாவட்ட கவுன்சிலர், குமார், நல்லம்பள்ளி, அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.