/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தி.மு.க., நீர்மோர் பந்தல் திறப்பு
/
தி.மு.க., நீர்மோர் பந்தல் திறப்பு
ADDED : ஏப் 29, 2024 07:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்தங்கரை : ஊத்தங்கரை சட்டசபை தொகுதியில், தி.மு.க., சார்பில் மூன்று இடங்களில், நீர், மோர், தண்ணீர் பந்தல் திறப்பு விழா நேற்று நடந்தது.சாமல்பட்டி, காரப்பட்டு, ஊத்தங்கரை பஸ் ஸ்டாண்ட் ஆகிய பகுதிகளில் தண்ணீர் பந்தலை தி.மு.க., கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., ரிப்பன் வெட்டி தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர், மோர், இளநீர், தர்பூசணி, வெள்ளரிப்பிஞ்சு வழங்கினார்.
இதில், இதில் மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

