/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ரூ.70.55 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகள் துவக்கி வைப்பு
/
ரூ.70.55 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகள் துவக்கி வைப்பு
ரூ.70.55 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகள் துவக்கி வைப்பு
ரூ.70.55 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகள் துவக்கி வைப்பு
ADDED : மார் 11, 2024 07:03 AM
ஓசூர் : ஓசூர், ராம்நகர் கோட்டை மாரியம்மன் கோவில் அருகே, கிருஷ்ணகிரி எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 9.85 லட்சம் ரூபாய் மதிப்பில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் அமைக்கும் பணியை, காங்., - எம்.பி., செல்லக்குமார் நேற்று பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார். சந்தனப்பள்ளி கிராமத்தில், 9.90 லட்சம் ரூபாயில், சமுதாய கூடம் கட்டும் பணி, கர்ணப்பள்ளி கிராமத்தில், 3 லட்சம் ரூபாய் மதிப்பில் ரட்சைக்கு தடுப்புச்சுவர் கட்டும் பணி ஆகியவற்றை துவக்கி வைத்தார். கிருஷ்ணகிரி, காங்., மேற்கு மாவட்ட தலைவர் முரளிதரன், மாநகர தலைவர் தியாகராஜன், மாவட்ட செய்தி தொடர்பாளர் கீர்த்தி கணேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
அதேபோல், பெட்டமுகிலாளம் மலை கிராமத்தில், 9.90 லட்சம் ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள சமுதாய கூடம், குல்லட்டியில், 6.10 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கட்டடம், உள்ளுகுறுக்கையில், 9.90 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கட்டடம், பேரிகை அரசு உருது உயர்நிலைப்பள்ளியில், 21.90 லட்சம் ரூபாய் மதிப்பில், கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் ஆகியவற்றை, எம்.பி., செல்லக்குமார் திறந்து வைத்தார்.

