/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மருத்துவ படிப்புக்கு தேர்வான மாணவர்களுக்கு ஊக்கத்தொகை
/
மருத்துவ படிப்புக்கு தேர்வான மாணவர்களுக்கு ஊக்கத்தொகை
மருத்துவ படிப்புக்கு தேர்வான மாணவர்களுக்கு ஊக்கத்தொகை
மருத்துவ படிப்புக்கு தேர்வான மாணவர்களுக்கு ஊக்கத்தொகை
ADDED : செப் 20, 2024 01:35 AM
மருத்துவ படிப்புக்கு தேர்வான
மாணவர்களுக்கு ஊக்கத்தொகை
பென்னாகரம், செப். 20-
பென்னாகரம் சுற்றுவட்டாரத்தில், அரசு பள்ளியில் பயின்று, மருத்துவம் பயலும் மாணவர்களுக்கு பொன்னம்மாள் நஞ்சையா அறக்கட்டளை ஆண்டுதோறும் ஊக்கத்தொகை வழங்குகிறது.
இந்த கல்வியாண்டில், அரசு பள்ளியில் பயின்று, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவம் பயில உள்ள மாங்கரை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் படித்த மஞ்சநாய்கனஅள்ளி அகிலா, பூவரசு, திலீப்குமார், தின்னுார் சத்திவேல், கலப்பம்பாடி அரசு பள்ளியில் படித்த பெரிய கடமடை முத்தமிழ்அரசு, பி.அக்ரஹாரம் அரசு பள்ளியில் படித்த சீலநாய்கனுார் ஸ்ரீரங்கன் உள்ளிட்ட, 7 மாணவர்களுக்கு தலா, 18,000 ரூபாய் என மொத்தம், 1.26 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
இதை மாணவர்களுக்கு, பொன்னம்மாள் நஞ்சையா அறக்கட்டளை சார்பாக டாக்டர்.தியாகராஜன், தமிழ்நாடு மின்வாரிய மேற்பார்வையாளர் சுமதி, மருந்தாளுனர் பிரதாப் உள்ளிட்டோர் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். மாணவர்களுக்கு புத்தாடைகளும் வழங்கப்பட்டது. அந்த மாணவர்களுக்கு தேவையான, மருத்துவம் சார்ந்த உதவிகள் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.