/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரியில் தொடர் மழை தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள்
/
தர்மபுரியில் தொடர் மழை தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள்
தர்மபுரியில் தொடர் மழை தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள்
தர்மபுரியில் தொடர் மழை தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள்
ADDED : டிச 28, 2024 02:41 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், விவசாயிகள் பல்வேறு காய்கறி, பழங்கள் மற்றும் பூக்களை சாகுபடி செய்து வருகின்றனர். பெஞ்சல் புயலின் போது பெய்து வந்த மழையால், மாவட்டத்தி-லுள்ள ஏரி, குளம், குட்டை போன்ற நீர் நிலைகள் நிரம்பின.
தண்ணீர் இருப்பு உள்ளதன் காரணமாக விவசாயிகள் நெல், பருத்தி, மரவள்ளிகிழங்கு, தக்காளி, சாமந்தி, சம்பங்கி உள்ளிட்டவைகளை அதிக அளவில் சாகுபடி
செய்தனர். இந்த பயிர்கள் தண்ணீர் விட்டு நல்ல முறையில் வளர்ந்து வந்தது.
இந்நிலையில், தற்போது மாவட்டம் முழுவதும் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளது. மேலும், அறுவடைக்கு தரயான நிலையில் உள்ள நெற்பயிர், அதிகம் வீசிய காற்றுக்கு வயலில் சாய்ந்து நெல் கதிர்கள் தண்-ணீரில் மூழ்கியுள்ளன. இதனால், நெல் சாகுபடி செய்த விவசா-யிகள் கவலை
யடைந்துள்ளனர்.