தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/பட்டுக்கூடு வரத்து அதிகரிப்பு

பட்டுக்கூடு வரத்து அதிகரிப்பு

பட்டுக்கூடு வரத்து அதிகரிப்பு


ADDED : டிச 31, 2024 07:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 31, 2024 07:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி: தர்மபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் நேற்று, 20.06 லட்சம் ரூபாய் அளவுக்கு பட்டுக்கூடு ஏலம் நடந்தது.

தர்மபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் தினசரி ஏலத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். தொடர்ந்து விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. கடந்த, 28 அன்று, 38 பேரும் நேற்று, 49 விவசாயிகள் ஏலத்திற்கு வந்திருந்தனர். இவர்கள், 90 குவியல்களாக, 3,424 கிலோ வெண் பட்டுக்கூடுகளை கொண்டு வந்திருந்தனர். இதில், 435 முதல், 671 வரை சராசரியாக, 576 ரூபாய்க்கு பட்டு கூடுகள் ஏலம் போனது. இவற்றின் மொத்த மதிப்பு, 20.06 லட்சம் ரூபாய். நேற்று ஒருநாள் நடந்த இந்த ஏலத்தால் அரசுக்கு, 30,096 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us