/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
இந்தியன் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் திறனறி தேர்வில் மாநில அளவில் சாதனை

ADDED : நவ 24, 2025 01:12 AM
அரூர்: தமிழக அரசு நடத்திய மேல்நிலை முதலாமாண்டு மாணவர்களுக்-கான தமிழ் இலக்கிய திறனறி தேர்வு, கடந்த மாதம், 11ம் தேதி-யன்று நடந்தது.
இதில் தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோட்டில் அமைந்துள்ள இந்தியன் மெட்ரிக் மேல்நிலைப்-பள்ளி மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர்.இதில், மாணவி மவுமிதா, 100க்கு, 100 மதிப்பெண் பெற்று, மாநில அளவில் முதலிடம் பெற்றார், மாணவியர் அபிநயா, தனுஸ்ரீ ஆகியோர் தலா, 100க்கு, 99 மதிப்பெண் பெற்று, மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றனர். மாணவி சுவாதிகாஸ்ரீ, 100க்கு, 97 மதிப்பெண்ணும், மாணவி அஷ்விதா, 100க்கு, 96 மதிப்பெண்ணும், மாணவி காவியா, மாணவர் தமிழமுதன் தலா, 100க்கு, 95 மதிப்பெண்களும் பெற்று வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் மற்றும் முதுகலை தமிழ் ஆசிரியர்கள் குமார், பிரேம் சுந்தர், திருப்பதி ஆகியோரை, இந்-தியன் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் அரிமா பழனிவேல், செயலாளர் தமிழ் முருகன், பொருளாளர் அருள்மணி, பள்ளி முதல்வர் சுபாஷ், மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் வாழ்த்தி, பாராட்டினர்.