/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக்கோப்பை அறிமுகம்
/
ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக்கோப்பை அறிமுகம்
ADDED : நவ 24, 2025 01:11 AM
தர்மபுரி: ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலக கோப்பை தர்மபுரி வந்ததை-யொட்டி, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ், தர்மபுரி, தி.மு.க., - எம்.பி., மணி முன்னிலையில், உலக கோப்பையை அறிமுகம் செய்து வைத்தார்.
ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக்கோப்பை போட்டிகள், சென்னை மற்றும் மதுரை ஆகிய இடங்களில் நவ., 28 முதல், டிச., 10 வரை நடக்கவுள்ளது. அதுசமயம், உலக கோப்பையா-னது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் எடுத்து செல்லப்பட்டு வருகி-றது. நேற்று தர்மபுரி மாவட்டத்திற்கு உலக கோப்பை வந்தடைந்-தது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தர்மபுரி மாவட்ட ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு இணைந்து, மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்த அறிமுக விழாவில், உலக கோப்பை, விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு அறி-முகம் செய்யப்பட்டது. இதில், தர்மபுரி பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன் மாவட்ட எஸ்.பி., மகேஷ்வரன், நகராட்சி சேர்மன் லட்சுமி, ஆர்.டி.ஓ., காயத்ரி, மாவட்ட விளையாட்டு நலன் அலுவலர் சாந்தி, சி.இ.ஓ., ஜோதிசந்திரா, தர்மபுரி மாவட்ட ஹாக்கி கவுரவ தலைவர் ரங்கநாதன், தர்மபுரி மாவட்ட ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு தலைவர் மாரியப்பன் உட்பட பலர் கலந்து கொண்-டனர்.

