/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வாணியாறு அணை கிளை வாய்க்கால் துார்வார விவசாயிகள் வலியுறுத்தல்
/
வாணியாறு அணை கிளை வாய்க்கால் துார்வார விவசாயிகள் வலியுறுத்தல்
வாணியாறு அணை கிளை வாய்க்கால் துார்வார விவசாயிகள் வலியுறுத்தல்
வாணியாறு அணை கிளை வாய்க்கால் துார்வார விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : அக் 14, 2024 06:23 AM
பாப்பிரெட்டிப்பட்டி: தற்போது பெய்து வரும் மழையால், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வாணியாறு அணை, 50 அடியை எட்டியுள்ளது.
இன்னும் சில தினங்களில் முழு கொள்ளளவான, 65.27 அடியை நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணை நிரம்பும் பட்சத்தில் உபரி நீர் வெளியேற்றப்படும். இடதுபுற வாய்க்கால் வழியாக வெளியேற்றப்படும் உபரி நீர் வெங்கடசமுத்திரம், மோளை-யானுார், தேவராஜபாளையம், விழுதிப்பட்டி, மெனசி, பூத-நத்தம், ஆலாபுரம், ஜம்மனஹள்ளி ஆகிய பகுதிகள் வழியாக செல்லும். அவ்வாறு செல்லும் போது, விழுதிப்பட்டியில் இருந்து மெனசி பகுதி விவசாயிகளுக்கு செல்லும் கிளை வாய்க்கால் செல்வதில்லை. இந்த உபரிநீர் அப்பகுதி விவசாயிக-ளுக்கு, எட்டாக்கனியாக உள்ளது.அப்பகுதியில் செல்லும் கிளை வாய்க்கால், பல ஆண்டுகளாக துார்வாரப்படாமல், முட்புதர்களின் பிடியில் உள்ளது. இந்த வாய்க்கால் துார்வாரப்பட்டால் அப்பகுதியிலுள்ள, ஆயிரக்கணக்-கான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். இது குறித்து பல-முறை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடமும், மாவட்ட நிர்வா-கத்திடமும் மனுக்கள் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
அணை கட்டப்பட்டதிலிருந்து இதுவரை, 3 முறை மட்டுமே அப்பகுதிக்கு தண்ணீர் சென்றுள்ளது. ஆகவே இந்த கிளை வாய்க்காலை துார்வார அரசு நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.