/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல்
/
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல்
ADDED : ஆக 29, 2025 01:31 AM
தர்மபுரி, தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் சார்பில், புதிதாக கட்டப்பட்ட உணவுக்கூடம் மற்றும் சங்க நூலகம் திறப்பு விழா, சங்கத்தின், 27ம் ஆண்டு துவக்க விழா, ஆண்டு பொதுக்குழு கூட்டம், மாநில நிர்வாகிகளுக்கு பாராட்டுவிழா, 70 முதல், 95 வயது நிறைவு பெற்றவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிக்கும் விழ என, ஐம்பெரும் விழா, நேற்று சங்க கட்டடத்தில் நடந்தது.
மாவட்ட தலைவர் மாணிக்கம் தலைமை வகித்தார். செயலாளர் கந்தசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாநில மத்திய செயற்குழு உறுப்பினர் மணி வரவேற்றார். மாநில தலைவர் மாணிக்கம் உணவு கூடத்தை திறந்து வைத்தார். மாநில பொதுச்செயலாளர் முத்துகுமரவேலு, நுாலகத்தை திறந்து வைத்து பேசினார்.
விழாவில், 70 வயது முடிவடைந்த ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் அனைவருக்கும், 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். அனைத்து ஓய்வூதியர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியை, 2.50 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மருத்துவப்படியை, 1,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். அரசு மருத்துவமனையில் ஓய்வூதியர்கள் வார்டு ஏற்படுத்த வேண்டும். 3 மாதத்திற்கு ஓரு முறை ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடத்த வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

