/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பொதுமக்கள் புகார், தீர்வுகளைபதிவேடுகளில் பதிய வலியுறுத்தல்
/
பொதுமக்கள் புகார், தீர்வுகளைபதிவேடுகளில் பதிய வலியுறுத்தல்
பொதுமக்கள் புகார், தீர்வுகளைபதிவேடுகளில் பதிய வலியுறுத்தல்
பொதுமக்கள் புகார், தீர்வுகளைபதிவேடுகளில் பதிய வலியுறுத்தல்
ADDED : ஏப் 17, 2025 01:53 AM
கிருஷ்ணகிரி:பர்கூர் தாலுகாவில், 'உங்களை தேடி, உங்கள் ஊரில்' திட்டம் நேற்று துவங்கியது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், பி.ஆர்.ஜி., மாதேப்பள்ளியில், ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம், சாலிநாயனப்பள்ளி வி.ஏ.ஓ., அலுவலகம், காரகுப்பம் அங்கன்வாடி மையம், பஞ்., மன்ற அலுவலகம், ரேஷன் கடை, அரசு உயர்நிலைப்பள்ளி, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் நீரேற்று மையம், பர்கூர் ஐ.இ.எல்.சி., மான்ஸ் மனவளர்ச்சி குன்றியோருக்கான பள்ளி, அரசு மாணவியர் விடுதி, சிந்தகம்பள்ளி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டார்.
சாலிநாயனப்பள்ளி வி.ஏ.ஓ., அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் அடங்கல், பட்டா, சிட்டா, புஞ்செய், நஞ்செய் நிலங்கள், ஏரி, கிணற்று பாசனங்கள் உள்ளிட்ட பல்வேறு பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், பொதுமக்கள் மனுக்கள், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், பதிவேடுகளில் குறிப்பிட வேண்டும் என்றார். தொடர்ந்து, பர்கூர் தாசில்தார் அலுவலகத்தில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் தினேஷ்குமார் பெற்றுக்கொண்டார்.
டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) பெரியசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தனஞ்செயன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) மகாதேவன், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.