/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரூரில் இளைஞர்களுக்கு இன்ஸ்பெக்டர் அறிவுரை
/
அரூரில் இளைஞர்களுக்கு இன்ஸ்பெக்டர் அறிவுரை
ADDED : மே 29, 2024 07:36 AM
அரூர் : தர்மபுரி மாவட்டம், அரூர் டவுன் பஞ்.,க்கு உட்பட்ட கோவிந்தசாமி நகர், கோல்டன்சிட்டி குடியிருப்பு பகுதியில், வாலிபர்கள் சிலர், குழுக்களாக சேர்ந்து புகைபிடித்தல், மது அருந்துதல் மற்றும் அங்குள்ள வனப்பகுதிக்குள் சென்று போதைப்பொருட்களை பயன்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.
அவர்கள் மீது நடவடிக்கை கோரி, அப்பகுதி மக்கள் அரூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். இதையடுத்து நேற்று முன்தினம், சம்பவ இடம் சென்ற அரூர் இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ்மோகன், இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என, இளைஞர்களுக்கு அறிவுரை கூறியதுடன், தொடர்ந்து தவறான செயல்களில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கை விடுத்தார். அப்பகுதியில், போலீஸ் சார்பில் எச்சரிக்கை பேனர் வைக்கப்பட்டது.