/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க அறிவுறுத்தல்
/
மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க அறிவுறுத்தல்
ADDED : ஆக 12, 2024 06:39 AM
தர்மபுரி: பள்ளிக் கல்வித்துறையின், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் மூலம், பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு நிகழ்வுகள், தர்மபுரி மாவட்டத்தில் முதற்கட்டமாக, 407 அரசு தொடக்கப் பள்ளிகளில் நேற்று முன்தினம் நடந்தது.
அதகப்பாடி தொடக்கப் பள்ளியில் நடந்த கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் சாந்தி பேசுகையில், “பள்ளியின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில், பள்ளி மேலாண்மை குழுவினர் சிறப்பாக செயல்பட வேண்டும். பள்ளி மாணவர்கள் இடை நிற்றலை தவிர்க்க, தேவையான நடவடிக்கைகளை பள்ளி மேலாண்மை குழு மேற்கொள்ள வேண்டும். மாணவர்களின் கல்வித்தரம் மற்றும் அவர்களின் கற்றல் திறன்கள் குறித்து, அறிந்து கொள்ள வேண்டும். ஆசிரியர்களின் வருகை சீராக உள்ளதா, என்பதை கண்காணிக்க வேண்டும்,'' என்றார்.இதில், சி.இ.ஓ., ஜோதிசந்திரா, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மான்விழி, மகளிர் திட்ட இணை இயக்குனர் முகமது நசீர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் ரவிக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.