/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கட்சி சார்ந்த கூட்டம் நடத்த அனுமதி பெற அறிவுறுத்தல்
/
கட்சி சார்ந்த கூட்டம் நடத்த அனுமதி பெற அறிவுறுத்தல்
கட்சி சார்ந்த கூட்டம் நடத்த அனுமதி பெற அறிவுறுத்தல்
கட்சி சார்ந்த கூட்டம் நடத்த அனுமதி பெற அறிவுறுத்தல்
ADDED : மார் 20, 2024 10:27 AM
பாப்பிரெட்டிப்பட்டி: லோக்சபா தேர்தலையொட்டி, பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மண்டபம், அச்சகம் மற்றும் நகை கடை உரிமையாளருக்கான தேர்தல் தொடர்பான நடத்தை விதிகள் குறித்து நேற்று தாலுகா அலுவலகத்தில், மண்டப, அச்சக, நகை அடகு கடை உரிமையாளர்களுக்கு ஆய்வு கூட்டம் நடந்தது.
இதில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் செர்லினா ஏஞ்சலா தலைமை வகித்து பேசுகையில், ''மண்டபங்களில் ஆலோசனை கூட்டம் நடத்த, முறையாக தேர்தல் பிரிவில் அனுமதி பெற வேண்டும். அரசியல் கட்சி நிர்வாக கூட்டங்கள் அனுமதித்தல் கூடாது. கட்சி சார்ந்த கூட்டம் நடத்த அனுமதி பெற வேண்டும். காதுகுத்து போன்ற நிகழ்ச்சிகளில், அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டால், அனுமதி பெற வேண்டும்.
நிகழ்ச்சி நடக்கும்போது, மண்டபத்தின் அருகே கட்சி கொடிகள் பயன்படுத்த அனுமதி இல்லை. முறையற்ற பணி பரிவர்த்தனைக்கு இடம் அளிக்கக்கூடாது. நகை அடகு கடை முறையற்ற பண பரிமாற்றம் அனைத்தும் கண்காணிக்கப்படும். நகை அடகு வைப்பது தொடர்பாக முறையான ரசீது வாடிக்கையாளர்களுக்கு தரப்பட வேண்டும். இருப்பு வைத்திருக்கும் பணத்திற்கு முறையான கணக்கு வைத்திருக்க வேண்டும்,'' என்றார்.
கூட்டத்தில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், தாசில்தார் சரவணன், தேர்தல் துணை தாசில்தார் சிவன் ஞானம், ஆர்.ஐ., கார்த்திக் உள்ளிட்ட அச்சக, மண்டப, நகை அடகு கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்
கம்பைநல்லுார்: தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த இருமத்துாரில், ஹிந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நேற்றிரவு நடந்தது. இதில், தலைவர் அர்ஜூன்சம்பத் பேசினார். கூட்டத்தில் தெய்வீக பேரவை மாநில தலைவர் அசோக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
2 குழந்தைகளுடன் தாய் மாயம்
பாப்பிரெட்டிப்பட்டி: பொம்மிடி அடுத்த பொ.நடுர் பகுதியை சேர்ந்தவர் கோபி. கூலித்தொழிலாளி; இவர் மனைவி புவனேஸ்வரி, 30; இவர்களுக்கு, 9, 7 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் நத்தமேட்டில் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் காலை, 8:30 மணியளவில் குழந்தைகளை பள்ளியில் விட புவனேஸ்வரி அழைத்துச் சென்றார். அதன் பின் மூவரும், வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து புவனேஸ்வரியின் தாய் கலைவாணி புகார் படி, பொம்மிடி போலீசார்
விசாரிக்கின்றனர்.
3 கறவை மாடுகள் மாயம்
காரிமங்கலம்: காரிமங்கலம் அடுத்த, மாட்லாம்பட்டி, சமத்துவபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி முருகன், 52; இவர், 3 எச்.எப்., ரக கறவை மாடுகள் வளர்த்து வந்தார். கடந்த, 14 அன்று இரவு வீட்டின் அருகில் மாடுகளை கட்டி விட்டு வீட்டில் துாங்கச் சென்றார். மீண்டும், 15 அன்று அதிகாலை வந்து பார்த்தபோது, 3 மாடுகளையும் காணவில்லை. இது குறித்து, முருகன் போலீசில் புகார் அளித்தார். புகார் படி, காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

