மக்கள் தொகை கணக்கெடுப்பு விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
மக்கள் தொகை கணக்கெடுப்பு விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
ADDED : ஆக 24, 2026 01:53 AM
அ நிறம் | அளவு
அரூர்: தர்மபுரி மாவட்டத்தில், மக்கள்தொகை கணக்கெடுப்பு, 2027ன், முதல் கட்டமாக, வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெ-டுப்பு பணிகள் கடந்த, 1ம் தேதி துவங்கி, வரும் 31ம் தேதி வரை நடக்கிறது.
அரூர் அடுத்த மத்தியம்பட்டியில், நேற்று வீடுகள் கணக்கெடுக்கும் பணிகளை மேற்கொள்ளும் கணக்கெ-டுப்பாளர் மற்றும் மேற்பார்வையாளர்களின் பணிகளை ஆய்வு செய்த தர்மபுரி கலெக்டர் சரவணன், பணிகளை விரைந்து முடிக்-கவும், 100 சதவீதம் துல்லியமாக இருக்க வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது, தேர்தல் தாசில்தார் இளஞ்செழியன் உடனிருந்தார்.
