/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஏரிகள் துார்வாரும் பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
/
ஏரிகள் துார்வாரும் பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
ஏரிகள் துார்வாரும் பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
ஏரிகள் துார்வாரும் பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
ADDED : ஜூன் 01, 2025 01:40 AM
தர்மபுரி, தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஜல்சக்தி அபியான் ஆய்வுக்கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சதீஷ் முன்னிலை வகித்தார்.
மத்திய அரசுக்குழுவின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சக இயக்குனர்
அனுாபா நாயர் தலைமை வகித்து பேசியதாவது: மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்டம் மூலம், தர்மபுரி மாவட்டத்தில் மழை நீர் சேகரிப்பு, நீர் மேலாண்மை திட்டம், ஏரிகள் துார்வாரும் பணிகள் நடந்து வருகிறது.
இதன் மூலம் மழைநீரை ஏரிகளில் தேக்கி வைக்கும்போது, தண்ணீர் பிரச்னைகளை தவிர்க்கலாம். தண்ணீர் சேகரிப்பையும் அதிகப்படுத்தலாம். எனவே, இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.
தொடர்ந்து, நல்லம்பள்ளி, காரிமங்கலம், பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி மற்றும் அரூர் வட்டாரங்களில், 1.43 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு துறைகள் மூலம் மழைநீரை சேமிக்க மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து, ஆய்வுகள் மேற்கொண்டார். இதில், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.