/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ரூ.22 லட்சத்தில் திட்ட பணிகள் விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
/
ரூ.22 லட்சத்தில் திட்ட பணிகள் விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
ரூ.22 லட்சத்தில் திட்ட பணிகள் விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
ரூ.22 லட்சத்தில் திட்ட பணிகள் விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
ADDED : ஜூலை 13, 2025 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி, கடத்துார் ஒன்றியம், புட்டிரெட்டிப்பட்டி ஊராட்சியில், என்.ஆர்.ஜி.எஸ்., திட்டத்தில், 12.60 லட்சம் ரூபாய் மதிப்பில் கால்வாய் அகலப்படுத்தும் பணி, பசுவபுரம் ஊராட்சி, கந்தகவுண்டனுாரில், 4.82 லட்சம் ரூபாய் மதிப்பிலும், கோபிசெட்டிபாளையத்தில், 5.71 லட்சம் ரூபாய் மதிப்பிலும், ஏரி புனரமைக்கும் பணி என, மொத்தம், 22.13 லட்சம் ரூபாய் மதிப்பில் நடந்து வரும் பணிகளை, மாவட்ட கலெக்டர் சதீஸ் ஆய்வு செய்தார்.
பின் பணிகள் தரமாகவும், விரைவாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். ஆய்வின் போது, மாவட்ட ஊராட்சி உதவி இயக்குனர் விமல் ரவிக்குமார், பி.டி.ஓ., சுருளிநாதன் உடனிருந்தனர்.