/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மழையால் நீர்நிலைகளின் கரைகள் சேதமாவதை தடுக்க அறிவுறுத்தல்
/
மழையால் நீர்நிலைகளின் கரைகள் சேதமாவதை தடுக்க அறிவுறுத்தல்
மழையால் நீர்நிலைகளின் கரைகள் சேதமாவதை தடுக்க அறிவுறுத்தல்
மழையால் நீர்நிலைகளின் கரைகள் சேதமாவதை தடுக்க அறிவுறுத்தல்
ADDED : டிச 01, 2024 01:37 AM
மழையால் நீர்நிலைகளின் கரைகள்
சேதமாவதை தடுக்க அறிவுறுத்தல்
தர்மபுரி, டிச. 1-
தர்மபுரி மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை மற்றும் 'பெஞ்சல்' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குனர் திவ்யதர்ஷினி தலைமை வகித்தார். மாவட்ட கலெக்டர் சாந்தி முன்னிலை வகித்தார்.
இதில், பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறைகளின் கட்டுபாட்டில் உள்ள நீர் நிலைகள் குறித்த விபர பட்டியல் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். நீர்நிலைகளின் கரைகள் சேதாரம் ஏற்படும் போது அதை தடுக்க, போதுமான அளவு மணல் மூட்டைகளை வைத்திருக்க பொதுப்பணித்
துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது. ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ள நிவாரண முகாம்களான சமுதாய கூடங்கள், திருமண மண்டபங்கள், பள்ளிகள் குறித்த விபர பட்டியல்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். மருத்துவத் துறையினர், கர்பிணிகள் குறித்த விவரங்களை சேகரித்து, மழைக்காலத்தில் தேவை ஏற்படும் நேரத்தில் அவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். சேதமான பள்ளி கட்டடங்களில், பாதிப்புகள் ஏதும் ஏற்படாதவாறு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். நகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள், பொதுமக்களுக்கு வினியோகம் செய்யும் குடிநீரில் குளோரினேஷன் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்ய, அனைத்துத்துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டது.இதில், மாவட்ட எஸ்.பி., மகேஸ்வரன், வளர்ச்சித்துறை சப் கலெக்டர் கவுரவ்குமார், டி.ஆர்.ஓ., கவிதா உள்பட பலர் பங்கேற்றனர்.

