/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
நில உடமை ஆவணங்களை பதிந்து அரசு திட்டங்களை பெற அறிவுறுத்தல்
/
நில உடமை ஆவணங்களை பதிந்து அரசு திட்டங்களை பெற அறிவுறுத்தல்
நில உடமை ஆவணங்களை பதிந்து அரசு திட்டங்களை பெற அறிவுறுத்தல்
நில உடமை ஆவணங்களை பதிந்து அரசு திட்டங்களை பெற அறிவுறுத்தல்
ADDED : ஜூன் 23, 2025 05:30 AM
தர்மபுரி: தர்மபுரி, மாவட்ட கலெக்டர் சதீஸ் வெளியிட்டுள்ள அறிக்-கையில்
தெரிவித்துள்ளதாவது:
விவசாயிகள் அரசின் பல்வேறு திட்ட பலன்களை பெற, தங்க-ளது நில உடைமை விபரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்ற தொடர்புடைய ஆவணங்களை, ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. இதில், ஏற்படும் கால தாமதத்தை தவிர்க்கும் வகையில், அரசின் திட்டங்களில் விவசாயிகள் குறித்த நேரத்தில் பயன்பெற முடியும். அனைத்து விபரங்களையும் மின்னணு முறையில் சேகரிக்க, தமிழகத்தில், வேளாண் அடுக்கு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, விவசாயிகளின் பதிவு விபரங்களுடன், ஆதார் எண், மொபைல் எண், நில உடைமை விபரங்களை, விடுபாடின்றி இணைக்கும் பணி, சம்பந்தப்பட்ட வருவாய் கிராமத்தில் நடந்து வருகிறது. மேலும்,
விவசாயிகள் பொது சேவை மையம் சென்று, அங்கும் நில உடைமை விபரங்கள் இணைக்கப்பட்ட பின்னர், அனைத்து விப-ரங்களும் ஒருங்கிணைக்கப்பட்ட ஆதார் எண் போன்ற தனித்துவ-மான தேசிய அளவிலான அடையாள எண், ஒவ்வொரு விவசா-யிக்கும் ஏற்படுத்தப்படும். 2025- ------ 26 முதல், பிரதம மந்திரி கவு-ரவ நிதி திட்டம் பயிர் காப்பீடு திட்டம் போன்ற மத்திய, மாநில அரசின் திட்டங்களில் விவசாயிகள், எளிதில் பயன்பெற, தேசிய அளவிலான தனித்துவ அடையாள எண் மிகவும் அவசியம்.
எனவே, விவசாயிகள் தங்களது கிராமங்களில் நடக்கும் முகாம்-களில், ஜூலை, 7ம் தேதிக்குள் தங்களது நில உடமை விபரங்-களை அளித்து, இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.