/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரசு நிர்ணயித்த விலையில் உரங்களை விற்க அறிவுறுத்தல்
/
அரசு நிர்ணயித்த விலையில் உரங்களை விற்க அறிவுறுத்தல்
அரசு நிர்ணயித்த விலையில் உரங்களை விற்க அறிவுறுத்தல்
அரசு நிர்ணயித்த விலையில் உரங்களை விற்க அறிவுறுத்தல்
ADDED : ஜூன் 27, 2025 01:29 AM
அரூர், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த வேளாண் அலுவலர்கள் பர்கூர் எலிசபெத்மேரி, கிருஷ்ணகிரி விஜயலட்சுமி, மத்துார் சிவரஞ்சனி ஆகியோர், தர்மபுரி மாவட்டம், அரூரிலுள்ள உரக்கடைகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, உரம், பூச்சி மருந்து விற்பனை விலை விபரம் குறித்த பட்டியல் விவசாயிகள் பார்க்கும்படி வைக்க வேண்டும். அனுமதி பெறாத நிறுவனங்களில், உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை கொள்முதல் செய்யவோ, விற்பனை செய்யவோ கூடாது. மேலும், இடு
பொருட்களை விற்பனை செய்யும்போது விவசாயிகளுக்கு ரசீது வழங்க வேண்டும்.
உரங்களை கண்டிப்பாக அரசு நிர்ணயித்த விலையில் விற்பனை செய்ய வேண்டும் என, அதிகாரிகள் அறிவுறுத்தினர். மேலும், கூடுதல் விலைக்கு பூச்சி மருந்து, களைக்கொல்லி விற்பனை செய்தால், உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், விற்பனை தடை செய்யப்பட்டு மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரித்தனர். விவசாயிகளும் தாங்கள் வாங்கும் இடுபொருட்களுக்கு ரசீது கேட்டு பெற, அதிகாரி
கள் அறிவுறுத்தினர்.