தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ திடக்கழிவுகளை 4 வகையாக பிரித்து வழங்க அறிவுறுத்தல்

திடக்கழிவுகளை 4 வகையாக பிரித்து வழங்க அறிவுறுத்தல்

திடக்கழிவுகளை 4 வகையாக பிரித்து வழங்க அறிவுறுத்தல்


ADDED : ஜூன் 05, 2026 04:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 05, 2026 04:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாப்பிரெட்டிப்பட்டி; பொ.மல்லாபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கை:

தர்மபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்-சிக்கு உட்பட்ட பகுதிகளில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்த, கழிவு உரு-வாகும் இடத்திலேயே கட்டாயமாக, 4 வகைகளாக பிரித்து வழங்க வேண்டும். சமையலறை கழி-வுகள், பழங்கள், காய்கறிகள், இறைச்சி கழிவுகள், பூக்கள் போன்ற மக்கும் ஈரமான கழிவுகளை பச்சை வண்ண கூடையில் சேர்க்க வேண்டும். பிளாஸ்டிக், காகிதம், உலோகம், கண்ணாடி, மரம், ரப்பர், போன்ற மறுசுழற்சி செய்யக்கூடிய உலர் கழிவுகளை நீல வண்ண கூடைகளில் போட வேண்டும். டயர்கள், சானிட்டரி பேட்கள், டாம்-பன்கள், ஆணுறைகள் வீட்டில் சிகிச்சைக்கு பயன்படுத்தும் மருத்துவ கழிவுகள் போன்ற மறு சுழற்சி செய்ய முடியாத சுகாதார கழிவுகளை சிவப்பு வண்ண கூடையில் சேர்க்க வேண்டும். வண்ண பூச்சி டப்பாக்கள், மின்விளக்குகள், பாதரச வெப்பமானிகள், மருந்துகள், இ - வேஸ்ட், பேட்-டரி, போன்ற சிறப்பு கவனிப்பு பொருட்களை கருப்பு வண்ண கூடையில் சேர்க்க வேண்டும். இந்த நடை

முறைகளை செயல்படுத்த பொ.மல்லாபுரம் பேரூராட்சி மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us